குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

தேசியப் பட்டியல்/பழங்குடிப் பிரிவினர் மையத்திற்கான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மாநாட்டிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சக செயலாளர் தலைமை வகித்தார்

Posted On: 26 FEB 2022 5:08PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் சிந்துதுர்கில் இன்று நடைபெற்ற தேசியப்  பட்டியல்/பழங்குடிப்  பிரிவினர் மையத்திற்கான சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில்கள் மாநாட்டிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில்கள் அமைச்சக செயலாளர் திரு பி பி ஸ்வைன் தலைமை வகித்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில்கள் அமைச்சகத்தின் இரண்டு நாள் சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக தேசியப்  பட்டியல்/பழங்குடிப்  பிரிவினர் மையத்திற்கான சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநாட்டை நேற்று மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில்கள் அமைச்சர் திரு நாராயணன் ரானே தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது யூனியன் வங்கியின் சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில்கள் ரூபே அட்டையை அறிமுகப்படுத்திய அமைச்சர், சிந்துதுர்கில் உள்ள கங்கவல்லியில், தென்னை நார் வாரிய பிராந்திய அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

தொழில் முனைதலை ஊக்குவித்துச்  சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் குறிப்பாகப்  பட்டியல்/பழங்குடிப்  பிரிவுகளைச்  சேர்ந்த தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்துவது தேசிய பட்டியல்/பழங்குடிப்  பிரிவினர் மையத்திற்கான சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில்கள் மாநாட்டின் நோக்கம் ஆகும்.

மாநாட்டில் பேசிய சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில்கள் அமைச்சக செயலாளர், சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில் துறையின் அனைத்து பங்குதாரர்களைச்  சென்றடையும் வகையிலான நிகழ்ச்சியாக இந்த மாநாடு அமைந்துள்ளது என்றார். "உற்பத்தித்  தொழில்களுக்கு மட்டுமே முன்னர் பொருந்தக்கூடிய சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில் துறைக்கான நலத் திட்டங்கள் தற்போது சேவைத்  துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினர்.

பட்டியல்/பழங்குடிப்  பிரிவுகளைச்  சேர்ந்த தொழில் முனைவோருக்கு முடிந்த அளவு சம அளவிலான களத்தை உருவாக்குவதற்கு, மத்திய அரசு எவ்வாறு கவனம் செலுத்துகிறது என்பது குறித்து செயலாளர் விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1801394

*************



(Release ID: 1801453) Visitor Counter : 204


Read this release in: English , Urdu , Marathi , Hindi