பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் இடுகை இடப்பட்ட நாள்: 26 பிப் 2022 தில்லி

Posted On: 26 FEB 2022 9:31AM by PIB Chennai

இந்தோ-ஓமன் பயிற்சி, ஈஸ்டர்ன் பிரிட்ஜ்-VI (2022) ஜோத்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் 2022 பிப்ரவரி 21 முதல் 25 வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஓமன் ராயல் விமானப் படை  (RAFO) இந்திய விமானப்படையுடன் (lAF) பங்கேற்றது. இரு விமானப்படைகளின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில், செயல்பாட்டு வெளிப்பாடுகளை வழங்குதல் மற்றும் சிறந்த நடைமுறைகளின் பரஸ்பர பரிமாற்றத்தை மேற்கொள்வதில இப்பயிற்சி வெற்றி கண்டது

இந்த பயிற்சியின் போது ஜோத்பூரின் விமானப்படை நிலையத்திற்கு இரு தரப்பிலிருந்தும் வருகை தந்த மூத்த அதிகாரிகளில் ஓமன் ராயல் விமானப் படையின் செயல்பாடுகள் துறைத் தலைமை இயக்குனர் மற்றும் இந்திய விமானப் படை தென்மேற்குப்  பிரிவின்  மூத்த விமானப் பணியாளர் அதிகாரி ஆகியோர் அடங்குவர். பரஸ்பர ஒத்துழைப்பின் கூடுதல் வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். பரஸ்பர அனுபவப் பரிமாற்றம் மற்றும் செயல்பாட்டு அறிவின் மூலம் இந்திய விமானப் படை மற்றும் ஓமன் ராயல் விமானப் படைப்    பிரிவுகளுக்கு இடையே பயனுள்ள தொடர்புக்கான வாய்ப்பை இந்தப் பயிற்சி அளித்தது. இரு நாடுகளின் பணியாளர்களுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளையும் இது வழங்கியது.

***************



(Release ID: 1801428) Visitor Counter : 194


Read this release in: English , Urdu , Hindi , Bengali