கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தாரா - இந்திய அறிவு முறைக்கு மரியாதை தொடரின் முதல் நிகழ்வை கலாச்சார அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்தது.

Posted On: 25 FEB 2022 6:00PM by PIB Chennai

 

கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தாரா - இந்திய அறிவு முறைக்கு மரியாதை தொடர் புதுதில்லியில் இன்று தொடங்கியது. அறிவியல் வாரத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் பதிவு செய்யப்பட்ட செய்தியின் மூலம் உரையாற்றினார்.

"பூஜ்ஜியத்திற்கு அப்பால் - கணிதத்திற்கு இந்தியாவின் சில அடிப்படைப் பங்களிப்புகளின் ஆய்வு" என்ற தலைப்பில் புகழ்பெற்ற கணிதவியலாளர் திரு மஞ்சுள் பார்கவா சிறப்புரை ஆற்றினார். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு உறுப்பினர் செயலாளர் திரு ராஜீவ் குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் கணிதம் மிக நீண்ட மற்றும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது என்று திரு கோவிந்த் மோகன் கூறினார். கணிதத்திற்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. மனிதகுலம் செழிக்க மற்றும் இணைந்து வாழ்வதற்கான சிறந்த இடமாக உலகை மாற்றுவதற்கு, இந்த துறைக்கான பங்களிப்பைக் கொண்டாடுவதற்கான நேரம் இது என்று அவர் கூறினார்.

பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையிலான விரிவுரைகள் வாயிலாக தாரா வரிசையை நடத்துவதற்கு கலாச்சார அமைச்சகம் பெருமிதம் கொள்கிறது என்றும் அவர் கூறினார்.

கணிதத்தில் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து பேசிய திரு மஞ்சுள் பார்கவ், பூஜ்ஜியத்தை விடவும் இன்னும் அதிகமான பங்களிப்பை கணிதத் துறையில் இந்தியா வழங்கியுள்ளது என்றார். கணிதத்தில் பூஜ்ஜியத்திற்கான பங்களிப்பு உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் அங்கீகரிக்கப்பட்டு கற்பிக்கப்படும் அதே வேளையில், இந்தியாவின் மற்ற முக்கிய பங்களிப்புகள் பொதுவாக குறிப்பிடப்படாமல் இருக்கின்றன என்று அவர் கூறினார்.

பூஜ்ஜியத்தை தவிர கணிதத்தில் பத்து இந்திய பங்களிப்புகளை அவர் எடுத்துரைத்தார். இந்திய எண் அமைப்பு, பௌதாயனா-பிதாகோரஸ் தேற்றம், மொழியின் கணிதம், முக்கோணவியலில் சைன் செயல்பாடு, எதிர்மறை எண்கள், இருபடிச் சமன்பாடுகளுக்கான தீர்வுகள், பைனோமியல் குணகங்கள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.

திரு ராஜீவ் குமார் பேசுகையில், கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியின் மூலம் பண்டைய இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முதன்முறையாக உலகிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801130

                                                            *******************


(Release ID: 1801217) Visitor Counter : 197


Read this release in: English , Urdu , Hindi