வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘நீடித்த நகரங்கள் இந்தியா திட்டம்’ செயலாக்கத்தில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உலக பொருளாதார அமைப்பும்தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன

प्रविष्टि तिथि: 24 FEB 2022 5:55PM by PIB Chennai

எரிசக்தி, போக்குவரத்து போன்ற துறைகளில் கரியமில வாயு வெளியேற்றப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலம், நகரங்களுக்கு உகந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கில், ‘நீடித்த நகரங்கள் இந்தியா திட்டம் செயலாக்கத்தில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உலகப் பொருளாதார அமைப்பும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனமும் இன்று கையெழுத்திட்டுள்ளன.

2070-க்குள் இந்தியாவில் கரியமில வாயு (கார்பன்) வெளியேற்றத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்துவது என, கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதி அளித்துள்ள நிலையில், இந்த முன்முயற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்திய நகரங்களை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நகரங்களாக மாற்ற, இந்தத் திட்டம் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய நவீன நரகங்கள் இயக்கத்தின் திட்ட இயக்குநரும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை செயலாளருமான திரு குணால் குமார், பிரதமரின் வாக்குறுதியை செயல்பாட்டுக்கு கொண்டுவர  தூய்மையான எரிசக்தி மாற்றத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றார்.  மேலும், இந்தத் திட்டம், நீடித்த வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியாவும், இந்தியாவில் உள்ள நகரங்களும் நடைமுறைப்படுத்தும் திட்டங்களை உலக அளவில் அறிந்து கொள்ள வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800831

*********

 


(रिलीज़ आईडी: 1800903) आगंतुक पटल : 351
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी