அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உற்பத்தித்துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சிகர மையமாக இந்தியா உருவாக்கியுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங்

Posted On: 23 FEB 2022 3:46PM by PIB Chennai

உற்பத்தித்துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சிகர மையமாக இந்தியா உருவாக்கியுள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை-இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இந்தியா-சிங்கப்பூர் தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் இருபத்தி எட்டாவது பதிப்பில் தொடக்க உரையாற்றிய அமைச்சர், பிளாக்செயின், நேனோ தொழில்நுட்பம், குவாண்டம் கணினியியல், பொருட்களின் இணையம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களோடு   25 தலைசிறந்த புதுமை நாடுகளின் பட்டியலில் இடம் பெற இந்தியா விரும்புவதாக கூறினார்.

மேக் இன் இந்தியா முன்முயற்சியின் காரணமாக உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருவதாகவும், இந்தியாவில் உள்ள பல கோடிக்கணக்கான நுகர்வோர் மற்றும் அதிகரித்து வரும் வாங்கும் சக்தியால் ஈர்க்கப்பட்ட சர்வதேச பெரு நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கனவே உற்பத்தி மையங்களை நிறுவி உள்ளதாகவும் அல்லது நிறுவ முயற்சி மேற்கொண்டு வருவதாகவும்  கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 1200-க்கும் மேற்பட்ட அரசு நிதி உதவி பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், துடிப்பான கொள்கை செயல்முறை, தொழில்துறை மற்றும் கல்வித்துறைக்கிடையேயான கூட்டு உள்ளிட்டவற்றுடன் புதுமை பொருளாதாரத்தின் காலத்திற்கு இந்தியா தன்னை தயார்படுத்தி வருவதாக கூறினார்.

தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் மற்றும் தொழில் உறவுகளுக்கான பொறுப்பு அமைச்சர் திரு. எஸ். ஈஸ்வரன், இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2020 முதல் 2021 வரை 19.8 பில்லியன் டாலரிலிருந்து 26.8 பில்லியன் டாலராக 35% வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறினர்.

பெங்களூருவை தொடர்ந்து சர்வதேச புதுமை கூட்டு மையங்களை இந்திய நகரங்களில் சிங்கப்பூர் அமைக்க இருப்பதாக திரு ஈஸ்வரன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800528

*********



(Release ID: 1800642) Visitor Counter : 238


Read this release in: English , Hindi , Marathi , Malayalam