பாதுகாப்பு அமைச்சகம்
ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் இந்தியா, ஓமன் படையினரின் பயிற்சி
प्रविष्टि तिथि:
21 FEB 2022 6:06PM by PIB Chennai
இந்திய விமானப்படை மற்றும் ஓமன் ராயல் ஏர்ஃபோர்ஸ் ஆகியவை ஜோத்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் 2022 பிப்ரவரி 21 முதல் 25 வரை ஈஸ்டர்ன் பிரிட்ஜ்-VI என்ற இருதரப்பு பயிற்சியில் பங்கேற்கின்றன.
பயிற்சியின் ஆறாவது பதிப்பான இது, இரு விமானப் படைகளுக்கிடையிலான செயல்பாட்டுத் திறன் மற்றும் இயங்குநிலையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.
இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை மற்றும் ஓமன் விமானப்படை பங்கேற்பது இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, தொழில்முறை தொடர்பு, அனுபவங்களின் பரிமாற்றம் மற்றும் செயல்பாட்டு அறிவை மேம்படுத்தும்.
இந்த பயிற்சியின் போது பல்வேறு மூத்த அதிகாரிகள் ஜோத்பூர் விமானப்படை நிலையத்திற்கு வருகை தர உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800081
************
(रिलीज़ आईडी: 1800125)
आगंतुक पटल : 269