அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜப்பானிய மூளையழற்சி வைரசை கண்டறிவதற்கான புதுமையான முறையை தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது
Posted On:
17 FEB 2022 5:34PM by PIB Chennai
தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் நாடுகளில் கொசுக்களால் பரவும் மூளைக்காய்ச்சலுக்கு முக்கிய காரணமாக ஜப்பானிய மூளையழற்சி வைரஸ் விளங்குகிறது. மேலும் இது பெரும்பாலும் டெங்கு என தவறாக கண்டறியப்படுகிறது.
ஜப்பானிய மூளையழற்சி வைரசுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பதால், பரவலைத் தடுக்க முன்கூட்டியே கண்டறிதல் அவசியம். ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம், இந்நோயறிதலுக்கான புதிய முறையை உருவாக்கியுள்ளது.
ஜப்பானிய மூளையழற்சி வைரஸ் நோயறிதலுக்கான வழக்கமான முறைகள் விலையுயர்ந்தவை, அதிக அபாயகரமானவை மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். இந்த புதிய முறையின் மூலம் நோய் கண்டறிதல் எளிதாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
(வெளியீட்டு விவரங்கள்: அகன்க்ஷா ராபர்ட்ஸ், வீர்பன்கேசர்வானி, ரூபல் குப்தா, சோனு காந்தி)
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799063
*******
(Release ID: 1799146)
Visitor Counter : 263