பாதுகாப்பு அமைச்சகம்

போர்ட் ப்ளேர் விமான தளத்தில் கூட்டுப்பாதுகாப்புப் பயிற்சி

Posted On: 17 FEB 2022 5:45PM by PIB Chennai

போர்ட் ப்ளேர் விமான தளத்தில் அந்தமான், நிக்கோபார் கமாண்ட்  கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சியை 2022 பிப்ரவரி 16 அன்று நடத்தியது. இந்தப் பயிற்சி, விமானதளத்தில் அல்லது வேறு இடத்தில் பயங்காரவாதத் தாக்குதல், பிணைக் கைதிகள் பிரச்சனை, கடத்தல் நிலை  போன்ற பல்வேறு அவசர காலங்களில் அனைத்துப் பாதுகாப்பு முகமைகளின், தயார் நிலையை சோதிப்பதை நோக்கமாகக் கொண்டது.

வீர் சவார்க்கர் சர்வதேச விமான நிலையத்திலும் ஐஎன்எஸ்  உத்க்ரோஷிலும் இரவு பகலாக பயிற்சிகள் நடத்தப்பட்டன. விமான தளத்திற்கு உள்ளே பல்வேறு இடங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை  எதிர்கொள்வதற்கு ராணுவம், கப்பற்படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) ஆகியவற்றின் விரைவு செயலாற்று அணிகள் ஈடுபடுத்தப்பட்டன.  அதே சமயம்  இந்த அணிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு  தேசிய பாதுகாப்புப் படை, கட்டாக் படைப்பிரிவுகள், கடற்படை கமாண்டோக்கள் ஆகியவற்றிலிருந்து சிறப்புப் படை  பிரிவுகளும் சேர்க்கப்பட்டன.   

***************(Release ID: 1799096) Visitor Counter : 177


Read this release in: English , Urdu , Hindi