அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புளூட்டோவின் மேற்பரப்பில் வளிமண்டல அழுத்தம் பூமியை விட 80,000 மடங்கு குறைவாக உள்ளது: தேவஸ்தல் ஆய்வகத்தின் உற்று நோக்கல் அடிப்படையிலான ஆய்வு
Posted On:
16 FEB 2022 5:35PM by PIB Chennai
புளூட்டோவின் மேற்பரப்பில் வளிமண்டல அழுத்தத்தின் துல்லியமான மதிப்பை இந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பாளர்கள் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் குழு கண்டறிந்துள்ளது. சராசரி கடல் மட்டத்தில் பூமியின் வளிமண்டல அழுத்தத்தை விட இது 80,000 மடங்கு குறைவாக உள்ளது.
3.6-மீ தேவஸ்தல் ஒளியியல் தொலைநோக்கி (இந்தியாவில் மிகப்பெரியது ) மற்றும் 1.3-மீ தேவஸ்தல் விரைவு ஒளியியல் தொலைநோக்கி ஆகியவற்றைப் பயன்படுத்திப் பெறப்பட்ட தரவுகளிலிருந்து 6 ஜூன் 2020 அன்று அழுத்தம் கணக்கிடப்பட்டது. நைனிட்டாலில் உள்ள தேவ்ஸ்தல்லில் இந்த தோலை நோக்கிகள் அமைந்துள்ளன.
ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட சர்வதேச விஞ்ஞானிகள் குழு இதை கண்டறிந்துள்ளது. 'ஆஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ்' சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
பதிப்பக இணைப்பு: https://iopscience.iop.org/article/10.3847/2041-8213/ac4249
பங்களிப்பாளர்கள்: புருனோ சிகார்டி, நாகர்ஹள்ளி எம். அசோக், ஆனந்த்மயி தேஜ், கணேஷ் பவார், ஷிஷிர் தேஷ்முக், அமேயா தேஷ்பாண்டே, சவுரப் ஷர்மா, ஜோஸ்லின் டெஸ்மர்ஸ், மார்செலோ அசாஃபின், ஜோஸ் லூயிஸ் ஓர்டிஸ், குஸ்டாவோ பெனடெட்டி-ரோஸி, பெலிப்பெஸ்ரா-ஆர். பாப்லோ சாண்டோஸ்-சான்ஸ், கிரிஷன் சந்த் மற்றும் புவன் சி. பட்
மேலதிகத் தகவல்களுக்கு, டாக்டர் சௌரப் (saurabh[at]aries.res.in), பேராசிரியர் என் எம் அசோக் (ashoknagarhalli[at]gmail.com), பேராசிரியர் ஆனந்த்மயி தேஜ் (tej[at] ]iist.ac.in) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798796
********
(Release ID: 1798846)
Visitor Counter : 225