புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2022 ஜனவரி மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள்

Posted On: 14 FEB 2022 5:32PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின், தேசியப்  புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), 2012=100 என்ற அடிப்படையில் கிராமப்புறம், நகர்ப்புறம், மற்றும் இரண்டும் இணைந்தவற்றுக்கான 2022-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1114 நகர்ப்புற சந்தைகளில் இருந்தும், 1181 கிராமப்புற சந்தைகளில் இருந்தும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின், களப்பணி பிரிவினரால், விலை குறித்த புள்ளி விவரங்கள் வாராந்திர பதிவேட்டில் சேகரிக்கப்படுகின்றன.

 

அகில இந்திய பணவீக்க விகிதமானது, பொது குறியீடுகள் மற்றும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.  2022 ஜனவரி மாதத்தில் 99.7 சதவீதம் கிராமங்கள் மற்றும் 98.2 சதவீதம் நகர்ப்புற சந்தைகளில் இருந்து விலை விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் சேகரித்தது.

 

ஜனவரி மாதத்தில் பணவீக்க விகிதங்களை நுகர்வோர் விலைக் குறியீட்டின் (பொது) அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, ஜனவரி மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 6.12 ஆகவும், நகரங்களில் 5.91 ஆகவும், இரண்டும் இணைந்து 6.01 ஆகவும் இருந்தன.

 

பணவீக்க விகிதங்களை நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, ஜனவரி மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 5.18 ஆகவும், நகரங்களில் 5.88 ஆகவும், இரண்டும் இணைந்து 5.43 ஆகவும் இருந்தன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798312

                                                                                **********************



(Release ID: 1798352) Visitor Counter : 193


Read this release in: English , Urdu , Hindi , Marathi