வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவிற்கு வெளிநாட்டு நிறுவனங்களின் இடம்பெயர்வு

प्रविष्टि तिथि: 11 FEB 2022 3:39PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக  பதில் அளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திரு சோம் பர்காஷ் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

வளர்ச்சி மற்றும் முதலீட்டை இந்தியாவுக்கு ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகள்/திட்டங்கள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன.  இந்தியாவில் உற்பத்தி செய்வோம்  திட்டம் 2014 செப்டம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது. முதலீட்டை எளிதாக்குதல், புதுமைகளை மேம்படுத்துதல், சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் இந்தியாவை உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் புதுமைக்கான மையமாக மாற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இது தொடங்கப்பட்டது.

சாத்தியமுள்ள முதலீட்டாளர்களைக் கண்டறிதல், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு ஆதரவளிக்கும் நிகழ்வுகள், உச்சிமாநாடுகள், சாலை-காட்சிகள் மற்றும் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிற ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு  இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டங்களை செயல்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக, உலக வங்கியின் தொழில் தொடங்குதல் அறிக்கை 2020-ன் படி, 2014-ல் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, உலக வங்கியின் எளிதாக தொழில் செய்தல் தரவரிசையில் 63-வது இடத்திற்கு முன்னேறியது.

மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகு, வணிகச் சீர்திருத்த செயல் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரிவான சீர்திருத்தப் பயிற்சியையும் மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தொடங்கியுள்ளது. மாநிலங்கள் முழுவதும் வணிகச்  சூழலை மேம்படுத்த இந்த பயிற்சி உதவியது.

நாட்டில் முதலீடுகளைத்  துரிதப்படுத்துவதற்காக அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புவியியல் குறியீடு தொழில்நுட்பம் சார்ந்த இந்தியா தொழில் நில வங்கி தொடங்கப்பட்டது. முதலீட்டாளர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தைக் கண்டறிய இது உதவுகிறது. முதலீட்டாளர்களுக்கான அனுமதிகளை எளிதாக்கும் வகையில், தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு செப்டம்பர் 2021-ல்  அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1797596

**********


(रिलीज़ आईडी: 1797807) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali