பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்களுக்கு தடையில்லா சான்றிதழ்கள்

Posted On: 11 FEB 2022 5:02PM by PIB Chennai

பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்கள் தயாரிக்க தடையில்லா சான்றிதழ்கள் கோரி, திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து, 2021 ஜனவரி 1 முதல் 2022 ஜனவரி 31 வரை மொத்தம் 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இவற்றில் 11 முழு நீள கதைப்படங்களுக்கானவை, 7 ஆவணப்படங்கள் / தொலைக்காட்சித் தொடர்களுக்கானவை.  முழு நீள கதைப்படங்களுக்கான 11-ல் 9 அனுமதிக்கப்பட்டு, ஒன்று நிராகரிக்கப்பட்டது.  மற்றொன்று நிலுவையில் உள்ளது என்று பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் தடையில்லா சான்றிதழுக்காக பெறப்பட்ட ஒரு விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. இந்திய விமானப்படை கடந்த 3 ஆண்டுகளில் தடையில்லா சான்றிதழுக்கு  13 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இவற்றில் எதுவும் நிராகரிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறினார். 

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவருக்கும், காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ வீரருக்கும் உள்ளூர் சிறுவனுக்கும் இடையேயான காதலை சித்தரிக்கும் முழு நீள திரைப்படம் இந்திய ராணுவத்தின் பெருமைக்கு உகந்தது இல்லை என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும், தடையில்லா சான்றிதழுக்கான ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797641

***************

 



(Release ID: 1797750) Visitor Counter : 123


Read this release in: English , Urdu