சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய இயற்கை வள மேலாண்மை அமைப்பு: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மண், நீர் தர மதிப்பீடு
Posted On:
10 FEB 2022 1:29PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கீழ்காணும் தகவல்களை இன்று வழங்கினார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் "தேசிய இயற்கை வள மேலாண்மை அமைப்பு" திட்டம் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும்.
நாட்டின் இயற்கை வளங்களை கண்டறிவது, மதிப்பீடு செய்வது மற்றும் கண்காணிப்பதற்கு தொலை உணர்வுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இத்திட்டத்தின் பிரதான நோக்கம் ஆகும்.
இத்திட்டத்தின் முக்கிய சாதனைகள் பின்வருமாறு:
(i) மேற்கு இமயமலைப் பகுதிச் சூழலியலில் காலநிலை மாற்றத்தால் உண்டாகும் தாவர மாற்றத்தின் அமைப்பு முறையை உருவகப்படுத்த அறிவுசார் முடிவெடுக்கும் கருவியை உருவாக்குதல்;
(ii) இமயமலைப் பகுதியின் பனி மற்றும் பனிப்பாறைகளைக் கண்காணித்தல்;
(iii) பாலைவனமாக்கல் நிலவர வரைபடம் தயாரித்தல் ;
(iv) தொலை உணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உப்பு பாதித்த நிலப் படிவங்களில் மண் மற்றும் நீரின் தர மதிப்பீடு;
(v) கிராமப்புறங்களில் ஒருங்கிணைந்த நிலப் பயன்பாடு, நீர் மற்றும் ஆற்றல் மேலாண்மைக்கான தொலை உணர்வுப் பயன்பாடு;
(vi) நிலப் பயன்பாட்டு இயக்கவியல், செயற்கைக்கோள் தொலை உணர்வு மற்றும் ஜிஐஎஸ் நுட்பங்களைப் பயன்படுத்தி, அச்சனகுமார் - அமர்கண்டக் உயிர்க்கோளக் காப்பகத்தின் நுண் கூறுகள், கட்டமைப்பு, கலவை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றில் அதன் தாக்கம் குறித்த ஆய்வு ; மற்றும்
(vii) தொலை உணர்வு மற்றும் ஜிஐஎஸ் பயன்படுத்தி குஜராத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் சுற்றுலா தளங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சூழலியல்களின் இயற்கை வளங்கள் மதிப்பீடு.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797149
*************
(Release ID: 1797342)
Visitor Counter : 301