அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குறைவான எரிசக்தியைப் பயன்படுத்தி குறைந்த அளவிலான கார்பனை வெளியேற்றக் கூடிய ஹைட்ரஜன் உற்பத்தி முறையை ஏஆர்சிஐ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

Posted On: 10 FEB 2022 10:22AM by PIB Chennai

மத்திய அறிவியல் & தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி நிறுவனமான உலோகவியல் பவுடர் & புதிய பொருட்களுக்கான  சர்வதேச அதிநவீன ஆராய்ச்சி மையம் (ARCI)  விஞ்ஞானிகள், உயர்தர (99.99% தூய்மையான) ஹைட்ரஜன் உற்பத்தி முறையை உருவாக்கியுள்ளனர்.

மெத்தனால் – தண்ணீர் கலவையை புறஅழுத்தம் மற்றும்  வெப்பநிலையில், தண்ணீரை மின்பகுப்பாய்வு செய்யத்தேவைப்படும் மின்சக்தியில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் பயன்படுத்தி இந்த தூய்மையான ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை ஹைட்ரஜன் ஏறத்தாழ முழுமையான கார்பன் வெளியேற்றம் இல்லாத எரிபொருளாகவும், நீடித்த எரிசக்திக்கான முன்மாதிரி திட்டமாகவும் இருக்கும்.  இந்தப் புதிய முறையில் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் வருங்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஹைட்ரஜன் எரிபொருள், ரசாயனம் கலந்த எரிபொருட்களான கேசோலின். டீசல்,  திரவப்பெட்ரோலிய எரிவாயு போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக எரிசக்தித் திறன் கொண்டதாக உள்ளதுடன், ஹைட்ரஜனை பிரித்தெடுக்க தேவையான மூலப்பொருளான தண்ணீர் அபரிதமான  அளவில் கிடைப்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் இயற்கை எரிவாயு,பெட்ரோலியப் பொருட்கள் மற்றும்  உயிரிக்கழிவுகளிலும்  ஹைட்ரஜன் அதிக அளவில் இருப்பதால் உற்பத்தியை அதிக அளவில் மேற்கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய முறையில் ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் இந்த முறைக்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது 

மேலும் விவரங்களுக்கு ஏஆர்சிஐ நிறுவனத்தின்எரிபொருள் தொழில்நுட்ப மைய முதுநிலை விஞ்ஞானி டாக்டர் ஆர் பாலாஜி-யை rbalaji@arci.res.in  என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

 *************** 


(Release ID: 1797254) Visitor Counter : 294


Read this release in: English , Hindi , Bengali