பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆதரவற்ற குழந்தைகளுக்கான திட்டம்: தமிழகத்தில் சாலையோரம் வசிக்கும் சிறார்கள் குறித்த தகவல்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 09 FEB 2022 3:40PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி. ஸ்மிருதி  இராணி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

 

பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட கடினமான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் மறுவாழ்வுக்காக, மத்திய அரசின் 'குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டம்' - மிஷன் வாத்சல்யாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

 

இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகள்/யூனியன் பிரதேச அரசுகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக நிதியுதவி, மானியம், ஆலோசனைகள், பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. திட்டத்தை  அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 

செயல்படுத்துகின்றன.

பால் சுவராஜ் தளத்தில் 2022 ஜனவரி 11 அன்று உள்ள தரவுகளின்படி நாடு முழுவதும் 5401 குழந்தைகள் தங்களது குடும்பங்களுடன் சாலையோரங்களில் வசிக்கின்றனர், 4148 குழந்தைகள் பகலில் சாலையோரம் தங்கி இரவில் அருகிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு அவர்களது குடும்பங்களுடன் திரும்புகின்றனர், 396 குழந்தைகள் ஆதரவின்றி சாலையோரங்களில் தனியாக வசிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 9945 ஆகும்.

 

பால் சுவராஜ் தளத்தில் 2022 ஜனவரி 11 படி உள்ள தரவுகளின் படி தமிழ்நாட்டில் 134 குழந்தைகள் தங்களது குடும்பங்களுடன் சாலையோரங்களில் வசிக்கின்றனர், 43 குழந்தைகள் பகலில் சாலையோரம் தங்கி இரவில் அருகிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு அவர்களது குடும்பங்களுடன் திரும்புகின்றனர், 14 குழந்தைகள் ஆதரவின்றி சாலையோரங்களில் தனியாக வசிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 191 ஆகும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796832

                                                                                ******************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1797002) வருகையாளர் எண்ணிக்கை : 273
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu