பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
09 FEB 2022 3:38PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006’-ஐ அரசு இயற்றியுள்ளது. முழு மாநிலத்திற்கோ அல்லது அதன் குறிப்பிட்ட பகுதிக்கோ ஒரு அதிகாரியையோ அல்லது அதிகாரிகளையோ 'குழந்தை திருமணத் தடுப்பு அதிகாரிகளாக' நியமிக்க மாநில அரசுக்கு இது அனுமதி அளிக்கிறது.
குழந்தைத் திருமணங்களால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய குழந்தை திருமணத் தடுப்பு அதிகாரிகள் ஆற்ற வேண்டிய செயல்பாடுகளையும் இந்தப் பிரிவு குறிப்பிடுகிறது. அந்தந்த மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களின் மேற்பார்வையின் கீழ் இந்த அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
இச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் அந்தந்த மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களால் பராமரிக்கப்படுகின்றன.
கூடுதலாக, விழிப்புணர்வு இயக்கங்கள், ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் மக்கள் தொடர்பு திட்டங்களை மத்திய அரசு மேற்கொள்வதோடு, இந்த தீய நடைமுறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்குகிறது.
மேலும், ‘மகள்களை பாதுகாப்போம், படிக்க வைப்போம்’ திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்துகிறது. பாலின சமத்துவம் மற்றும் குழந்தை திருமணங்களின் தீய விளைவுகள் குறித்து பெண்கள் இடையே மற்றும் சமூகத்தில் பெருமளவில் இது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
மேலும் சிக்கலில் உள்ள குழந்தைகளுக்கான அவசரகால 24 மணி நேர உதவி எண்ணாக 1098-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796829
*********
(रिलीज़ आईडी: 1796981)
आगंतुक पटल : 402