சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கான தேசிய உதவித்தொகை
Posted On:
09 FEB 2022 5:11PM by PIB Chennai
ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் எம்ஃபில் / பிஎச்டி போன்ற மேல்படிப்புகளைத் தொடர நிதியுதவி அளிக்கும் விதமாக தேசிய உதவித்தொகை திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்தி வருவதாக இத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் திரு ஏ.நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், இந்தத் திட்டம், 2018-19 முதல், மாநில அரசுகளின் பங்கேற்பின்றி, மத்திய அரசால் நேரடியாக செயல்படுத்தப்படுவதுடன் இந்த உதவித்தொகையை பெறுவதற்காக மாணவர்கள் யுஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர் அமைப்புகளால் நடத்தப்பட்டும் தேசிய தகுதித் தேர்வு மூலம், தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச்சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த 2016-17 முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை ரூ.99.16 கோடி விடுவிக்கப்பட்டு, 2,942 மாணவர்கள் பயனடைந்திருப்பதாகவும் திரு நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796875
***************
(Release ID: 1796970)