பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

திட்டங்களின் பயன்கள்/சேவைகள் வழங்க அடையாள ஆவணங்கள்

Posted On: 09 FEB 2022 3:37PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி  கூறியதாவது:

 அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஆதார் அடிப்படையில் அடையாளம் காணப்படுகின்றனர். ஆதார் அட்டை இல்லாத பயனாளிகளுக்கு கள அலுவலர்கள் ஆதார் எண் பெற உதவுகின்றனர். அதுவரை ஆதார் இல்லாத பயனாளிகளுக்கு மாற்று அடையாள ஆவணங்கள் மூலம் அங்கன்வாடி சேவைகள் அளிக்கப்படுகின்றன.

 

கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பான் எண்பாஸ்போர்ட், ஓய்வூதிய புத்தகம், என்பிஆர் ஸ்மார்ட் அட்டைவாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, குடும்ப அட்டை , மாணவர் அடையாள அட்டை என 9 அடையாள ஆவணங்களை 18 வயதுக்கு  மேற்பட்டவர்கள் கோவின் இணையதளத்தில்  பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதார் எண் இல்லாதவர்களுக்கு, இதர ஆவணங்கள் மூலம் அரசின் சேவைகள் அளிக்கப்படுகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796826

                                                                                ******************



(Release ID: 1796937) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Manipuri , Gujarati