ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயனாளிகள்

प्रविष्टि तिथि: 09 FEB 2022 5:06PM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2016-17 நிதியாண்டில் 39.84 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை 2020-21-ல் 72 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் திறன் குறைந்த உடல் உழைப்புடன் 100 நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் வாழ்வாதார பாதுகாப்பு அதிகரிப்பதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு.ஃபகன் சிங் குலாஸ்தே மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

இது தவிர வறட்சி மற்றும் இயற்கை சீற்றம் பாதித்த ஊரகப் பகுதிகள் என அறிவிக்கப்பட்டவற்றில் கூடுதலாக 50 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796871

***************


(रिलीज़ आईडी: 1796931) आगंतुक पटल : 600
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu