அணுசக்தி அமைச்சகம்
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு 2014 முதல் 3 முதல் 3.5% வரை உள்ளது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
09 FEB 2022 5:02PM by PIB Chennai
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு 2014 முதல் 3 முதல் 3.5% வரை உள்ளது என மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.
அணு மின்சார அலகுகளின் உற்பத்தியை சார்ந்ததாக இந்த பங்களிப்பு இருக்கும் என்றும், அணு மின்சார உற்பத்தியை அதிகபடுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் நீண்ட கால எரிசக்தி பாதுகாப்புக்கு நீடிக்கத்தக்க உள்நாட்டிலேயே மூன்றடுக்கு அணு மின்சாரத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இத்துடன் வெளிநாட்டு ஒத்துழைப்புடன் மென்னீர் அணு உலைகளும் அமைக்கப்பட இருப்பதாக அவர் கூறினார். தூய்மையான மின்சாரம் கிடைக்க அணு மின் திட்ட விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டில் வணிக ரீதியான மின் உற்பத்தி 34,162 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த நிலையில், 2021-ல் 43,918 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்தது என்றும் அமைச்சர் கூறினார்.
<><><><><>
(Release ID: 1796927)
Visitor Counter : 237