அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஒளிர்வு முறை வழியாக சார்ஸ்- கோவ்-2 தொற்றை கண்டறியும் புதிய தொழில்நுட்ப தளத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்

Posted On: 08 FEB 2022 3:03PM by PIB Chennai

ப்ளோரோசென்ட் ஒளி உமிழ்வு மூலம் தொற்று நோய்க்கிருமிகளை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்ப தளத்தை விஞ்ஞானிகள் குழு ஒன்று உருவாக்கியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொவிட் வகை சார்ஸ்-கோவ்-2  தொற்றைக் கண்டறியும் ஆற்றலை இந்த புதிய தொழில்நுட்பம் கொண்டுள்ளது.  இந்த தொழில்நுட்பத் தளத்தை, எச்ஐவி, இன்ப்ளுயன்சா, எச்சிவி, சிகா, எபோலா, பாக்டீரியா போன்ற கிருமிகளின் டிஎன்ஏ / ஆர்என்ஏ- வைக் கண்டறிய பயன்படுத்த முடியும்.

உலகம் முழுவதும் தொற்றுகள் மனிதர்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. சார்ஸ்-கோவ்-2 ஆல் உருவான கொவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதும் மக்களின் உயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆர்என்ஏ தொற்றின் பரவல் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதால், பரவலைத் தடுப்பதற்கும், உரிய நேர சிகிச்சை அளிப்பதற்கும் அதனைத் துல்லியமாக கண்டறிவது அவசியமாகியுள்ளது.

 மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான  மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்திய அறிவியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இதனை உருவாக்கியுள்ளனர்.

 இந்த ஆராய்ச்சி அண்மையில் வெளிவந்த ‘ஏசிஎஸ் சென்சார்ஸ்இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதுமையான தொழில்நுட்பத்துக்கான காப்புரிமைக்கும் விஞ்ஞானிகள் குழு விண்ணப்பித்துள்ளது.

இது பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த ஆங்கில   செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796485

***************



(Release ID: 1796554) Visitor Counter : 211