பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியா
प्रविष्टि तिथि:
07 FEB 2022 4:31PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்பு இணை அமைச்சர் திரு. அஜய் பட் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
155 மிமீ பீரங்கித் துப்பாக்கி அமைப்பு 'தனுஸ்', இலகுரக போர் விமானம் 'தேஜாஸ்', 'ஆகாஷ்' ஏவுகணை அமைப்பு, ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் கந்தேரி, ஐஎன்எஸ் சென்னை, நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு தளவாடங்கள் கடந்த சில ஆண்டுகளாக அரசின் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியின் கீழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் பல கொள்கை முன்முயற்சிகளை அரசு எடுத்துள்ளதோடு பாதுகாப்பு உபகரணங்களின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது,
இதன் மூலம் தொடர்ந்து இறக்குமதியைச் சார்ந்திருப்பது குறைக்கிறது. பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை-2020-ன் கீழ் உள்நாட்டில் பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது 2018-19 முதல் 2020-21 வரையிலும், நடப்பு ஆண்டில் டிசம்பர் 2021 வரையிலும், உள்நாட்டு உற்பத்தி ஊக்கப்படுத்தும் விதத்தில் பல்வேறு வகை மூலதனக் கொள்முதலின் கீழ், சுமார் ரூ 2,47,515 கோடி மதிப்பிலான 150 முன்மொழிவுகளை அரசு ஏற்றுக்கொண்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796164
**************
(रिलीज़ आईडी: 1796321)
आगंतुक पटल : 204