குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொகுப்பு மேம்பாட்டு திட்டம்

प्रविष्टि तिथि: 07 FEB 2022 3:55PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர்  திரு. நாராயண் ராணே எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

குறு,சிறு தொழில்கள் தொகுப்பு  மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு தொகுப்பில் உள்ள பொது உதவி மையத்துக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பொது உதவி மையம், தேவை அடிப்படையிலான திட்டம். கடந்த 3 ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ், பல்வேறு தொகுப்புகளில் உள்ள பொது உதவி மையங்களின் 36 திட்டங்கள், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுப்பின் வருவாய், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் ஆகியவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவை, பருவகாலம் ஆகியவற்றை சார்ந்து உள்ளன.

மூன்றாம் நபர் மூலம் இத்திட்டத்தை மதிப்பீடு செய்தபோது, தொகுப்பில் உள்ள பயனாளிகள் உற்பத்தியில் சராசரியாக 35 சதவீதம் உயர்வை தெரிவித்துள்ளனர். விற்பனை மற்றும் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 

இந்த தொகுப்பில் உள்ள கலைஞர்களுக்கு, பாரம்பரிய தொழில்கள் மீளுருவாக்க நிதி திட்டத்தின்  (Scheme of Fund for Regeneration of Traditional Industries (SFURTI) கீழ் உதவிகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த 2018-19ம் ஆண்டில் தமிழகத்தில் அம்பத்தூர், பரமக்குடியில் பொறியியல் தொகுப்பும், மதுரையில் தங்கநகை கடைகள் தொகுப்பும், சேலத்தில் ஸ்டீல் தயாரிப்பு தொகுப்பும், தஞ்சாவூரில் அரிசி ஆலை தொகுப்பும், விருதுநகரில் அச்சு தொழில், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் தொகுப்பும் உருவாக்கப்பட்டன. கடந்த 2019-20ம் ஆண்டில் தமிழகத்தில், கும்பகோணத்தில் எஸ்.எஸ்.பாத்திரங்கள் தொகுப்பு உருவாக்கப்பட்டது. ஈரோட்டில் கயிறு தயாரிப்பு தொகுப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 2020-21ம் ஆண்டில்  வேலூர் ராணிபேட்டையில் பொறியியல் தொகுப்பு உருவாக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட இணைப்பில் உள்ள ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796145

**********


(रिलीज़ आईडी: 1796254) आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu