வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பட்ஜெட்டில் மூலதன செலவு அதிகரிப்பு, பொருளாதார நடவடிக்கைகளை 3-4 மடங்கு பெருக்கும்: மத்திய அமைச்சர பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 05 FEB 2022 6:33PM by PIB Chennai

பட்ஜெட்டில் மூலதன செலவு அதிகரிப்பு, பொருளாதார நடவடிக்கைகளை  3-4 மடங்கு பெருக்கும் என  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

மும்பை பங்குச் சந்தையில் மத்திய பட்ஜெட் குறித்து தொழில்துறை தலைவர்களுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துயைாடினார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய பட்ஜெட் 2022-23, நாட்டின் தேவைகள் மீது கவனம் செலுத்துகிறது. இதில் மூலதன செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.  மூலதன செலவு 35 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.7.5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க, ரூ. 1 லட்சம் கோடி மாநிலங்களுக்கு, வட்டியில்லா கடனாக 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

மக்களுக்கான திட்டங்களில் மத்திய அரசும் மாநிலங்களும் இணைந்து ரூ.10.5 லட்சம் கோடியை செலவழிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பட்ஜெட் 2022ல் வழங்கப்பட்டுள்ள ரூ.10.5 லட்சம் கோடி என்ற அதிகரிக்கப்பட்ட மூலதன செலவு, பொருளாதார நடவடிக்கைகளை 3-4 மடங்கு பெருக்கும்.  இவ்வாறு மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795811

************


(रिलीज़ आईडी: 1795834) आगंतुक पटल : 258
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी