சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய அரசின் பங்களிப்புடன் ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய சுகாதாரத்துறை தகவல்
Posted On:
04 FEB 2022 5:30PM by PIB Chennai
அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத பகுதிகள் அல்லது முன்னேற்றத்தை விழையும் மாவட்டங்களில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மத்திய அரசின் பங்களிப்புடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன . இத்திட்டத்தின்படி, 157 புதிய மருத்துவக் கல்லூரிகள் 3 கட்டமாக அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, 70 கல்லூரிகள் ஏற்கனவே இயங்கி வருகிறது. இதில் 40 கல்லூரிகள் முன்னேற்றத்தை விழையும் மாவட்டங்களில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் படி புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் மாநில/ யூனியன் பிரதேச அரசிடமிருந்து வரவேற்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
----
(Release ID: 1795577)