விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

வேளாண் கல்வி பாடத்திட்டத்தில் இயற்கை வேளாண்மை சேர்ப்பு

Posted On: 04 FEB 2022 4:21PM by PIB Chennai

இளநிலை மற்றும் முதுநிலை வேளாண் பட்டப்படிப்பில் இயற்கை வேளாண்மை குறித்து பாடத்திட்டம் உருவாக்க இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் குழு ஒன்றை அமைத்துள்ளது.

  மாநிலங்களவையில் இன்று  கேள்வி ஒன்றுக்கு  எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இதனைத்  தெரிவித்தார்.

பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் துணைத் திட்டமாக 2020-21-ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்திய இயற்கை விவசாய முறையின் மூலம் இயற்கை வேளாண்மையை அரசு மேம்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.

 இயற்கை வேளாண்மை திட்டம், ரசாயன இடுபொருட்களை விலக்க வலியுறுத்துகிறது. இதற்கு மாறாக தழை உரம், சாணம் மற்றும் இதர தாவரங்களால் உருவாக்கப்பட்ட உரங்களை பயன்படுத்த முக்கியத்துவம் அளிக்கிறது. இதுவரை  இயற்கை வேளாண்மை முறையின் கீழ் 4.09 லட்சம் ஹெக்டேர் கொண்டு வரப்பட்டுள்ளது.  தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.4980.99 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2000 ஹெக்டேரில் இயற்கை வேளாண்மை செய்வதற்கு 16.02.2021 அன்று 31.82 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795460

***************



(Release ID: 1795553) Visitor Counter : 157


Read this release in: English , Urdu