ஜவுளித்துறை அமைச்சகம்
கையால் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்புகள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிலையான வளர்ச்சி
प्रविष्टि तिथि:
04 FEB 2022 4:13PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
கைவினைக் கலைஞர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் (கைவினைப் பொருட்கள்) செயல்படுத்தி வருகிறது.
பதிவு செய்யப்பட்ட கைவினைஞர்கள் (28.38 லட்சம் கைவினைஞர்கள் பஹ்சன் முன்முயற்சியின் கீழ் இதுவரை பதிவு செய்துள்ளனர்) இந்தத் திட்டங்களின் (தேசிய கைத்திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் விரிவான கைவினைப் பொருள் உற்பத்திக் குழுக்கள் மேம்பாட்டுத் திட்டம்) கீழ் பல்வேறு திறன் வளர்த்தல், பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் பலன்களைப் பெறலாம். இதற்காக, பயணப் படி உள்ளிட்ட சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
மேலும், 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக ரூ.1.00 லட்சம் வரையிலான கடன் தொகையில் 6% வட்டி மானியமும், ஒரு கைவினைஞருக்கு அதிகபட்சமாக ரூ.20,000/- கடன் தொகையில் 20% மார்ஜின் பணமும் வழங்கப்படுகிறது. உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு அருங்காட்சியகங்கள், மூலப்பொருள் வங்கிகள், நகர்ப்புற சந்தைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
கையால் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்புகள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த மூன்று ஆண்டுகளில் நிலையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. கைவினைப்பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795446
----
(रिलीज़ आईडी: 1795546)
आगंतुक पटल : 243