சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மனநல மருத்துவ மையங்களுக்கு போதிய நிதி உதவி: மத்திய சுகாதார இணையமைச்சர் தகவல்

Posted On: 04 FEB 2022 5:30PM by PIB Chennai

மனநல குறைபாடுகளை போக்குவதற்காக மனநல ஆரோக்கிய திட்டத்தை கடந்த 1982 முதல் இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி இந்தியா முழுவதும் உள்ள 704 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மனநல குறைபாடு, தற்கொலை எண்ணம், பணியிடங்களில் அழுத்தம், வாழ்க்கைக்கு ஏற்ற திறன் மேம்பாடு, ஆலோசனை ஆகியவை மாவட்ட மனநல ஆரோக்கிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆண்டிற்கு ரூ. 83.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

 

தேசிய மனநல ஆரோக்கியம்  திட்டத்தின் ஒரு பகுதியாக 25 சிறப்பு மையங்களில் மன நலம் குறித்த பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இத்தோடு 19 அரசு மருத்துவ கல்லூரிகள்/ நிறுவனங்களில் 47 மனநலம் குறித்த          முதுநிலைப்  பாடப்பிரிவு துறைகளை நடத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மையங்களுக்கும் அரசு அளித்து வந்த நிதியுதவி ரூ. 30 கோடியில் இருந்து 36.96 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், தேசிய மனநலம் மற்றும் நியூரோ சயின்ஸ் நிறுவனம் பெங்களூரு, லோகோபிரியா கோபிநாத் போர்டோலொய் மண்டல மன நல மையம், அசாம் மற்றும் மத்திய உளவியல் மருத்துவ மையம், ராஞ்சி ஆகிய மத்திய அரசு நிறுவனங்களுக்கு போதிய நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்

-----


(Release ID: 1795545) Visitor Counter : 272


Read this release in: English , Urdu