குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உதவி பெற்றுள்ள பெண் பயனாளிகளின் விவரங்கள்
प्रविष्टि तिथि:
03 FEB 2022 5:19PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நாராயண் ராணே, கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
விவசாயம் சாராத துறைகளில் குறு நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக 2008-09 முதல் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தை மைய முகமையாகக் கொண்டு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
திட்டத்தின் தொடக்கத்திலிருந்து 31.12.2021 வரை, சுமார் 7.38 லட்சம் புதிய குறு நிறுவனங்களுக்கு ரூ.17819.23 கோடி மணி மானியத்தைப் பயன்படுத்தி உதவி செய்யப்பட்டுள்ளது. சுமார் 60.60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கியுள்ளன. குறு நிறுவனங்களில் 50%-ஐ பட்டியல் பிரிவு/பழங்குடியின/பெண் தொழில் முனைவோர் தொடங்கியுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2018-19-ம் ஆண்டு 2463 பெண் பயனாளிகளும், 2019-20-ம் ஆண்டு 2841 பெண் பயனாளிகளும், 2020-21-ம் ஆண்டு 2663 பெண் பயனாளிகளும், 2021-22-ம் ஆண்டு 2022 ஜனவரி 27 வரை 1699 பெண் பயனாளிகளும் உதவி பெற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795121
**********
(रिलीज़ आईडी: 1795264)
आगंतुक पटल : 235