சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற உதவும் நபர்களுக்கு ரூ.5,000/ பரிசு: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்
Posted On:
03 FEB 2022 5:20PM by PIB Chennai
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
சாலையில் வாகன விபத்துக்களில் சிக்கும் நபர்களை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுபவர்களுக்கு சிறந்த உதவியாளர் விருது வழங்கப்படும். இத்திட்டத்தின் வழிகாட்டுதல்கள் படி, விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றி உடனடியாக மருத்துமவனையில் சேர்க்கும் உதவியாளர்களுக்கு விபத்து ஒன்றுக்கு ரூ.5,000 வழங்கப்படும். இத்திட்டம் சமூக ஊடகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலக செய்தி குறிப்பு மூலம் பிரபலப்படுத்தப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் சாலை விபத்துக்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. அவசர காலங்களில், சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு உதவும் வகையில் பொதுமக்களை ஊக்குவிப்பதற்கான விதிமுறைகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த 2020ம் ஆண்டு உருவாக்கி வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி விபத்து பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் சிறந்த உதவியாளர் அல்லது விபத்தில் சிக்கும் நபர்களை வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வோரிடம் போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மேல் விசாரணை நடத்தமாட்டார்கள். உடனடியாக செல்ல அனுமதிக்கப்படுவர். அதோடு, சாலை பாதுகாப்பில் சிறப்பான பணி செய்தவர்களுக்கு நிதியுதவி மற்றும் விருது திட்டத்தை சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி வெளியிட்டது. இதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் சாலை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795122
*************
(Release ID: 1795247)
Visitor Counter : 277