குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

எம்எஸ்எம்இ துறையின் விரிவாக்கம்

Posted On: 03 FEB 2022 5:17PM by PIB Chennai

தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு மாநில அரசு விஷயமாகும். நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் எம்எஸ்எம்இ-க்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் போட்டித்தன்மைகளை விரிவாக்கவும் பல்வேறு திட்டங்கள், கொள்கை முன்முயற்சிகள் மூலம் ‌மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது.

பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டம், பாரம்பரிய தொழில்களின் மறுவுருவாக்கத்திற்கான நிதித் திட்டம், புதிய கண்டுபிடிப்பு, ஊரகத் தொழில், தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், எம்எஸ்எம்இ தொகுப்பு மேம்பாட்டுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் போன்றவை மத்தியத் திட்டங்களில் அடங்கும்.

இவற்றில் 31.12.2021 நிலவரப்படி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரம்:
பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டம் - ரூ. 2,000 கோடி,
பாரம்பரிய தொழில்களின் மறுவுருவாக்கத்திற்கான நிதித் திட்டம் - ரூ. 170 கோடி,
புதிய கண்டுபிடிப்பு, ஊரகத் தொழில், தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் - ரூ. 15 கோடி,
எம்எஸ்எம்இ தொகுப்பு மேம்பாட்டுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் - ரூ. 156 கோடி.

இவை தவிர வடகிழக்கு மாநிலங்களுக்கான தனித்திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் தகவலை மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறை அமைச்சர் திரு நாராயண் ரானே இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.


*********

 



(Release ID: 1795197) Visitor Counter : 164


Read this release in: English , Urdu