பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் வாரியாக எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை
Posted On:
03 FEB 2022 5:24PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு .ராமேஸ்வர் தெலி, கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.
நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்கு டெபாசிட் இல்லா 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புக்களை வழங்குவதற்காக 2016 மே 1 அன்று பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதல் கட்டம் தொடங்கப்பட்டது. 2019 செப்டம்பரில் திட்டத்தின் இலக்கு எட்டப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்கு டெபாசிட் இல்லா 1 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புக்களை வழங்குவதற்காக 2021 ஆகஸ்ட் 10 அன்று பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டது. இக்கட்டத்தின் போது டெபாசிட் இல்லா சமையல் எரிவாயு இணைப்புடன் இலவச உருளை மற்றும் அடுப்பும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது .
ஒரு ஏழை குடும்பத்தில் எந்த உறுப்பினரின் பெயரிலும் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத பட்சத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு அக்குடும்பத்தின் பெண் உறுப்பினரின் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் வாரியாக எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை.
ஏற்கனவே உள்ள வழிமுறைகளின் கீழ் கூடுதலாக 60 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புக்களை வழங்குவதற்காக 2022 ஜனவரியில் இத்திட்டத்தை அரசு நீட்டித்தது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795128
**********
(Release ID: 1795191)
Visitor Counter : 234