சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
காற்றின் தரக் கட்டுப்பாடுகள் திருத்தியமைப்பு
प्रविष्टि तिथि:
03 FEB 2022 3:55PM by PIB Chennai
பொது சுகாதாரத்தையும் காற்று மாசிலிருந்து சூழலையும் பாதுகாக்க 2009ல் 12 மாசுபடுத்தும் விஷயங்களுக்கு தேசிய சுற்றுச்சூழல் காற்றின் தரக் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது.
எரிபொருள், தொழில்நுட்பம், மக்கள்தொகை அதேபோல் காற்று மாசு அளவிடும் தொழில்நுட்பங்களின் முன்னேற்றம், ஆபத்து மற்றும் வெளிப்பாட்டின் மதிப்பீடு, தேசிய சுற்றுச்சூழல் காற்றின் தரக் கட்டுப்பாடுகள் ஆய்வு ஆகியவை பொது சுகாதாரத்தில் சிறந்த மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படுகின்றன. இதையடுத்து தேசிய சுற்றுச்சூழல் காற்றின் தரக் கட்டுப்பாடுகள் ஆய்வு கரக்பூர் ஐஐடி தலைமையிலான கூட்டுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காற்றுத் தரத்திற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை
உலக சுகாதார அமைப்பு 2021 செப்டம்பரில் வெளியிடப்பட்டன. இருப்பினும் இவை கொள்கை உருவாக்குவோருக்கான வழிகாட்டுதல்கள்தான், சட்டப்படி கட்டுப்படுத்துவதற்கானவை அல்ல. எனவே காலந்தோறும் ஆய்வுசெய்யப்படுகிறது.
இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795074.
*****
(रिलीज़ आईडी: 1795146)
आगंतुक पटल : 297