அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உணவுப் பதப்படுத்தும் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாலிமர்களை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மூலப்பொருளாக ஃபீனாலை புதிய முறை திறம்பட மாற்றும்.
प्रविष्टि तिथि:
03 FEB 2022 1:59PM by PIB Chennai
உணவுப் பதப்படுத்தும் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாலிமர்களை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மூலப்பொருளாக ஃபீனாலை புதிய முறை திறம்பட மாற்றும் என்று இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நானோ மற்றும் சாஃப்ட் மேட்டர் அறிவியல் மையத்தை சேர்ந்த டாக்டர். பாகவதுல பிரசாத் மற்றும் சிஎஸ்ஐஆர்-தேசிய ரசாயன ஆய்வகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.
இவர்களது ஆராய்ச்சி குறித்த விவரங்கள் ‘நியூ ஜர்னல் ஆஃப் கெமிஸ்ட்ரி’-யில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இத்தகைய சுற்றுச்சூழலுக்குத் தீங்கற்ற மின்-கரிம மாற்றங்களால் நிறைவேற்றக்கூடிய தொழில்துறை சார்ந்த பிற செயல்முறைகளை ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
வெளியீட்டு இணைப்பு: DOI: 10.1039/d1nj04640c. மேலும் தகவல்களுக்கு, டாக்டர். பாகவதுல பிரசாத்தை pl.bhagavatula@cens.res.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795038
------
(रिलीज़ आईडी: 1795077)
आगंतुक पटल : 311