மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பள்ளி கல்விக்கான முழுமையான கல்வி திட்டம் (சமக்ரா சிக்‌ஷா)

Posted On: 02 FEB 2022 5:03PM by PIB Chennai

பள்ளி கல்விக்காக முழுமையான கல்வி திட்டத்தை(சமக்ரா சிக்‌ஷா) கடந்த 2018-19ம் ஆண்டில் மத்திய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை தொடங்கியது.  இத்திட்டம்மத்திய அரசின் முந்தைய சர்வ சிக்‌ஷா திட்டம், தேசிய மத்தியமிக் சிக்‌ஷா  திட்டம் மற்றும் ஆசிரியர் கல்வி ஆகிய மூன்று திட்டங்களையும் உள்ளடக்கியது. பள்ளி கல்வியில் ஆரம்ப வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து நிலைகளிலும் முழுமையான மற்றும் சம தரத்திலான கல்வியை உறுதி செய்யும் திட்டம்.

 

தேசிய கல்வி கொள்கை 2020 பரிந்துரைகளுக்கு ஏற்றவகையில் முழுமையான கல்வி திட்டம் உள்ளது. பல தரப்பட்ட மாணவர்களுக்கு சமஅளவிலான தரமான கல்வியை இத்திட்டம் உறுதி செய்யும்.  இத்திட்டம் 2021ம் ஆண்டு முதல் 2026ம் நிதியாண்டு வரை தொடரும்.

தேசிய கல்வி கொள்கை 2020 பரிந்துரைகளை அமல்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவதுதான் இத்திட்டத்தின்  முக்கிய நோக்கம்.

 

இத்தகவலை, மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794742

                                                                                *****************

 



(Release ID: 1794889) Visitor Counter : 284


Read this release in: English , Urdu , Bengali