பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
தேசிய ஊட்டச்சத்து இயக்கம்
Posted On:
02 FEB 2022 5:05PM by PIB Chennai
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்ற தொலைநோக்கு அடிப்படையில், போஷான் அபியான் (ஊட்டச்சத்து இயக்கம்) மார்ச், 2018-ல் தொடங்கப்பட்டது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை படிப்படியாகக் குறைப்பதுடன், 0-6 வயது வரையிலான குழந்தைகள், பருவமடைந்த சிறுமிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை குறிப்பிட்ட காலத்திற்குள் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டம், நாட்டிலுள்ள அனைத்து 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வறிக்கை-5 (2019-21), ஊட்டச்சத்து இயக்கத்தின் நோக்கம் சரியானதே என உறுதிப்படுத்தியிருப்பதுடன், ஊட்டச்சத்து குறியீடுகள் சீரடைந்திருப்பதையும் பிரதிபலித்துள்ளது. 5 வயதிற்குக் குறைவான குழந்தைகளிடம் காணப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு 38.4%-லிருந்து, 35.5%-ஆக குறைந்துள்ளது. எடை குறைவான குழந்தைகள் பிறப்பும் 35.8%-லிருந்து 32.1% ஆகக் குறைந்துள்ளது.
மேலும், ஆரோக்கியம், நலவாழ்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி முறைகளை உருவாக்கி, ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க, 2021-22 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஊட்டச்சத்து இயக்கம் 2.0, அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேமபாட்டுத்துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி இராணி, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் :
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794748
*****
(Release ID: 1794876)
Visitor Counter : 1307