அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
செமிகண்டக்டர் மற்றும் சென்சார்கள் துறையில் உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்திய நிறுவனங்களிடம் இருந்து வணிகமயமாக்கலுக்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Posted On:
02 FEB 2022 4:47PM by PIB Chennai
செமிகண்டக்டர் மற்றும் சென்சார் துறையில் புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்திய நிறுவனங்கள் வணிகமயமாக்கலுக்கான நிதி ஆதரவு பெறுவதற்கும், கடன்கள், பங்குகள் மற்றும் மானியங்கள் வடிவில் நிதி உதவி பெறுவதற்கும் தற்போது வாய்ப்புள்ளது.
செமிகண்டக்டர் மற்றும் சென்சார்கள் துறையில் உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்திய நிறுவனங்களிடம் இருந்து வணிகமயமாக்கலுக்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சட்டப்பூர்வ அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தால் வரவேற்கப்பட்டுள்ள முன்மொழிவுகள், இந்திய நிறுவனங்களுக்கு வணிகமயமாக்கலுக்கான நிதி உதவி வழங்குதல், அறிவியல், தொழில்நுட்பம், நிதி மற்றும் வணிகத் தகுதி, மற்றும் நிதி உதவி ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்தல் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளன.
மின்னணு அமைப்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதை மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக் கூறுகையில், தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் முக்கியப் பங்காற்றியுள்ளது, இந்த அழைப்பு செமிகண்டக்டர் மற்றும் சென்சார் சூழலியலுக்கு உத்வேகத்தை அளிக்கும், தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு இது அவசியம்,” என்றார்.
முன்மொழிவை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 26, 2022 ஆகும். மேலும் தகவல்களுக்கு, www.tdb.gov.in எனும் இணையதளத்தை பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794713
------
(Release ID: 1794806)
Visitor Counter : 199