சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மோட்டார் வாகன விதிகள், 2021 செயல்படுத்தப்பட்டதன் பலன்கள்: தமிழ்நாட்டில் வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த விவரங்கள்
Posted On:
02 FEB 2022 3:44PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின் படி, 2018-ல் மொத்தம் 4,67,041 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 3,10,612-ம், மது/போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக 12,018-ம் பாதை ஒழுங்கில்லாமை காரணமாக 24,781-ம், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 4,441-ம், கைபேசி பயன்பாட்டின் காரணமாக 9,039-ம், இதர காரனங்களுக்காக 1,06,150-ம் ஏற்பட்டுள்ளன.
2019-ம் ஆண்டில் மொத்தம் 4,49,002 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 3,19,028-ம், மது/போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக 12,256-ம் பாதை ஒழுங்கில்லாமை காரணமாக 24,431-ம், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 4,443-ம், கைபேசி பயன்பாட்டின் காரணமாக 10,522-ம், இதர காரனங்களுக்காக 78,322-ம் ஏற்பட்டுள்ளன.
2020-ம் ஆண்டில் மொத்தம் 3,66,138 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 2,65,343-ம், மது/போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக 8,355-ம் பாதை ஒழுங்கில்லாமை காரணமாக 20,228-ம், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 2,721-ம், கைபேசி பயன்பாட்டின் காரணமாக 6,753-ம், இதர காரனங்களுக்காக 62,738-ம் ஏற்பட்டுள்ளன.
புதிய சட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் 1 செப்டம்பர் 2019 முதல் 31 டிசம்பர் வரை ரூ 5507302804-ம், 1 ஜனவரி 2020 முதல் 31 ஜனவரி 2020 வரை ரூ 15645721915-ம், 1 ஜனவரி 2021 முதல் 31 ஜனவரி 2021 வரை ரூ 21042952569-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 செப்டம்பர் 2019 முதல் 31 டிசம்பர் வரை ரூ 267552184-ம், 1 ஜனவரி 2020 முதல் 31 ஜனவரி 2020 வரை ரூ 870410836-ம், 1 ஜனவரி 2021 முதல் 31 ஜனவரி 2021 வரை ரூ 922475383-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794697
---
(Release ID: 1794788)
Visitor Counter : 263