சுற்றுலா அமைச்சகம்
நாட்டில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஊக்குவிப்பை மத்திய பட்ஜெட் அளிக்கும்
Posted On:
01 FEB 2022 6:50PM by PIB Chennai
இன்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் 2022-23, மூலதனச் செலவை 35 சதவீதம் அதிகரிக்கும்.. இது, கோவிட்-19 பெருந்தொற்றின் 3 அலைகளின் பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிக்குச் செல்வதை தூண்டுகிறது.
இதனித் தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர், ஸ்ரீகிஷன் ஜி. ரெட்டி, இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும், பெரிய உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் எல்லை இணைப்புகளின் மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தியதற்காக பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்தியாவில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதில், எல்லைப்பகுதி கிராமங்கள் இணைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கு மத்திய நிதியமைச்சர் கூடுதல் நிதியாக ரூ.2,400 கோடி ஒதுக்கியுள்ளார். இதைச் சுற்றுலா கட்டமைப்பு, மார்க்கெட்டிங், மற்றும் திறன் மேம்பாட்டுக்கு சுற்றுலாத்துறை அமைச்சகம் பயன்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1794481
*****
(Release ID: 1794526)