பாதுகாப்பு அமைச்சகம்
வளர்ச்சி சார்ந்த பட்ஜெட், மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஊக்குவிப்பு அளிக்கும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்
Posted On:
01 FEB 2022 5:46PM by PIB Chennai
2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்பு சேவைகள் நவீனமயமாக்கம் மற்றும் பாதுகாப்புத்துறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையில், பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு ரூ.5.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 13.31 சதவீதம். இதில் பாதுகாப்புத்துறை ஓய்வூதியத்திற்கு ரூ.1.19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டு பாதுகாப்புத்துறை ஒதுக்கீட்டை விட, இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.46,970 (9.82 சதவீதம்) கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் நவீனமயமாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதி ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்திய கடற்படைக்கான ஒதுக்கீடு 44.53 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.46,323 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் தளவாடங்கள் கொள்முதலில் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க, இறக்குமதியை குறைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மூலதன கொள்முதல் பட்ஜெட்டில் 68 சதவீதம், உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஒதுக்கீட்டை விட 58 சதவீதம் அதிகம்.
இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சரை பாராட்டினார். மேக் இன் இந்தியா திட்டத்துக்கு, இந்த பட்ஜெட் ஊக்கம் அளிக்கும் எனவும், தேவையை ஊக்குவிக்கும் எனவும், இது வலுவான, செழிப்பான மற்றும் நம்பிக்கையான இந்தியாவின் திறன்களை மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1794415
***************
(Release ID: 1794508)
Visitor Counter : 262