பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கடலோர காவல் படையின் 46-வது அமைப்பு தினத்தின் அந்தமான் நிக்கோபார் பிரிவின் தலைமை தளபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 01 FEB 2022 6:17PM by PIB Chennai

இந்தியக் கடலோர காவல் படையின் 46-வது அமைப்பு தினமான 2022 பிப்ரவரி 1 அன்று அந்தமான் நிக்கோபார் பிரிவின் தலைமை தளபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1978-ல் வெறும் 07 கடல் பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட கடலோர காவல் படை தற்போது பல கப்பல்களையும், போர் விமானங்களையும் கொண்ட வலிமை மிக்க படையாக வளர்ச்சி அடைந்துள்ளது.

  அந்தமான் நிக்கோபாரில் கப்பற்படையோடு சேர்ந்து 1962 கி.மீ. கடலோர பகுதியையும், 836 தீவுகளையும் கடலோர காவல் படை கண்காணித்து வருகிறது. 6 லட்சம் சதுர கி.மீட்டரில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு தேச நலன் கருதி அது பாதுகாப்பை வழங்குகிறது.

 அந்தமான் நிக்கோபார் கடலோர காவல் படை கடந்த ஓராண்டில் கடலில் இருந்து 109 பேரை உயிருடன் பாதுகாத்துள்ளது. இரவு பகலும் மேற்கொள்ளும் கண்காணிப்பின் மூலம் இந்தத் தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 22 பேரைக் கைது செய்ததோடு, 4 வெளிநாட்டு மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியது.

***************


(Release ID: 1794492) Visitor Counter : 206


Read this release in: English , Urdu , Hindi