அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற அறிவியல் நிகழ்வுகளில் இளம் பெண்கள் மற்றும் பெண் விஞ்ஞானிகள் பங்கேற்பு
Posted On:
25 JAN 2022 5:49PM by PIB Chennai
அறிவியல் துறையில் பெண்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இளம் பெண்கள் மற்றும் பெண் விஞ்ஞானிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
நாட்டின் சில சிறந்த அறிவியல் நிறுவனங்களின் ஒரு பகுதியாக வேண்டும் என்று கனவு காண பெண்களை ஊக்குவிப்பதற்காக வலையரங்கு போன்ற பல நிகழ்வுகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஏற்பாடு செய்தது.
பெண் விஞ்ஞானிகளின் வெற்றியைக் கொண்டாடும் உரைகள், நிறுவனங்களில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் பயிலரங்குகள், இந்தியாவின் பெண் சாதனையாளர்களை நினைவு கூரும் வினாடி வினாக்கள் மற்றும் அறிவியலில் பெண்களின் பங்கேற்பு குறித்த விரிவுரைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் 24 ஜனவரி 2022 அன்று ‘தேசிய பெண் குழந்தைகள் தினத்தை’ கொண்டாடுவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பெண்கள் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் புதிய முன்முயற்சியின் கீழ் 'விக்யான் ஜோதி' என்ற கருப்பொருளில் பெண்களுக்கான வலையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792549
*******
(Release ID: 1792587)
Visitor Counter : 203