பாதுகாப்பு அமைச்சகம்
சைனிக் பள்ளி சங்கத்துடன் இணைய 194 பள்ளிகள் இதுவரை விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளன : பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
प्रविष्टि तिथि:
21 JAN 2022 6:19PM by PIB Chennai
சைனிக் பள்ளி சங்கத்துடன் இணைய 194 பள்ளிகள் இதுவரை விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளன எனவும், இவை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசியக் கல்வி கொள்கையுடன், குழந்தைகளுக்கு மதிப்பு மிக்க, கலாச்சாரம், பாரம்பரியம் , தேசபற்றுடன் கூடிய கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள சைனிக் பள்ளிகள் முறைக்கு, முன்னுதாரண மாற்றமாக, சைனிக் பள்ளி சங்கத்துடன், சைனிக் பள்ளிகளாக மாற விரும்பும் பள்ளிகளை இணைக்கும் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பள்ளிகள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செயல்படும் சைனிக் பள்ளிகளை விட வேறுபட்டதாக இருந்து பிரத்யேகமாக செயல்படும். முதல்கட்டமாக , மாநிலங்கள்/ தொண்டு நிறுவனங்கள் / தனியார் நிறுவனங்களிடம் இருந்து 100 பள்ளிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சைனிக் பள்ளி பாடமுறையை, நாட்டில் உள்ள பல பகுதிகளுக்கு வழங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த ஜனவரி 15ம் தேதி வரை பதிவு செய்த பள்ளிகளுக்கு, இணைவதற்கான விண்ணப்ப படிவத்தை சைனிக் பள்ளிகள் சங்கம் அனுப்பியுள்ளது. இந்த விண்ணப்பங்களை, சைனிக் பள்ளி சங்கத்துக்கு ஜனவரி 21ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இதுவரை 194 பள்ளிகள் https://sainikschool.ncog.gov.in என்ற இணையளத்தில் பதிவு செய்துள்ளன. இதற்கான மதிப்பீட்டை, பள்ளி மதிப்பீட்டுக் குழு மேற்கொண்டு, அதன் அறிக்கையை சைனிக் பள்ளி சங்கத்திடம் ஜனவரி கடைசி வாரத்தில் சமர்பிக்கும். இகுழுவில் மாவட்ட ஆட்சியர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள நவோதயா/கேந்திரியா வித்யாலயா பள்ளி முதல்வர்கள், அருகில் உள்ள சைனிக் பள்ளி முதல்வர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.
சைனிக் பள்ளி சங்கத்தால் ஒப்புதல் அளிக்கப்படும் பள்ளிகள், சைனிக் பள்ளி பாடத்திட்டங்களை அடுத்த கல்வி ஆண்டில் 6ம் வகுப்பு முதல் தொடங்கும். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், விளையாட்டு உட்பட மற்ற திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக அனுமதிக்கப்படும் பள்ளிகளுக்குத் தனியாக தெரிவிக்கப்படும்.
புதிய சைனிக் பள்ளிகளில் ஒரு பள்ளி-ஒரு விளையாட்டு என்ற முறையும் அமல்படுத்தப்படும். இதன் மூலம் அந்தப் பள்ளி, தான் அமைந்துள்ள மாநிலத்துக்கு அடையாளம் காணப்பட்ட ஒரு விளையாட்டு பிரிவில் கவனம் செலுத்தி, சிறப்பாகத் திகழ்வதற்காக இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
****************
(रिलीज़ आईडी: 1791645)
आगंतुक पटल : 292