பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களுக்கான முதலாவது மாவட்ட நல்லாட்சி குறியீட்டை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா நாளை வெளியிடுகிறார்

Posted On: 21 JAN 2022 12:09PM by PIB Chennai

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை மற்றும் மேலாண்மைபொது நிர்வாகம் ஊரக வளர்ச்சிக்கான ஜம்மு காஷ்மீர் நிறுவனம் ஆகியவைஹைதராபாத் நல்லாட்சிக்கான மையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களுக்கான முதலாவது மாவட்ட நல்லாட்சி குறியீட்டை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா நாளை வெளியிடுகிறார்.

மத்திய பணியாளர்கள்பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளனர்.

ஸ்ரீ நகரில் ஜூலை 2, 2021 அன்று நடைபெற்ற நல்லாட்சி நடைமுறைகளை செயல்படுத்துதல் குறித்த பிராந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சிறந்த மின் ஆளுமை - காஷ்மீர் அலமியா” தீர்மானத்தின்படி மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையால் ஜம்மு காஷ்மீர் அரசுடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் மாவட்ட நல்லாட்சிக் குறியீடு தயாரிக்கப்பட்டது.

மாவட்ட நல்லாட்சி குறியீட்டை உருவாக்குவதற்கான பணி ஜூலை, 2021-ல் தொடங்கப்பட்டுஇப்போது நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் நல்லாட்சி குறியீட்டைக் கொண்ட நாட்டின் முதல் யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாறும்.

ஜம்மு காஷ்மீர் அரசின் மாவட்ட நல்லாட்சி குறியீடுமாவட்ட அளவில் நல்லாட்சி தரவரிசைப்படுத்துவதில் பெரிய நிர்வாக சீர்திருத்தத்தை பிரதிபலிப்பதோடு மாநில/மாவட்ட அளவில் புள்ளிவிபரங்களை சரியான நேரத்தில் தொகுத்து வெளியிடுவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். மைல்கல்லாக அமைந்துள்ள மாவட்ட நல்லாட்சி குறியீடுஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து மாவட்டங்களின் செயல்திறனுக்கான ஆதார அடிப்படையிலான மதிப்பீட்டிற்கான வலுவான கட்டமைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் அரசின் தலைமைச் செயலாளர் திரு அருண் குமார் மேத்தா மற்றும் இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை செயலாளர் திரு வி ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் அரசின் மூத்த அதிகாரிகள்மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டங்களின் முதன்மை திட்ட அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அனைத்து மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் திட்டச் செயலர்கள்நிர்வாக சீர்திருத்த செயலர்கள் மற்றும் விரைவில் தேர்தலை எதிர்கொள்ளாத மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்களும் காணொலி மூலம் நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள நல்லாட்சிக்கான மையத்தால் மாவட்ட நல்லாட்சி குறியீட்டை உருவாக்குவது குறித்த விளக்கக்காட்சி இந்த நிகழ்வின் போது இடம்பெறும் . இதைத் தொடர்ந்துதேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாவட்ட வளர்ச்சி ஆணையர்களின் மாவட்ட விளக்கங்கள்பல்வேறு துறைகளின் சாதனைகளை வெளிப்படுத்தும்.

பின்னர்எதிர்காலத்தில் மாவட்டங்களின் செயல்திறனை அளவிடுவது தரப்படுத்துவது  மற்றும் மேம்படுத்துவது குறித்த குழு விவாதம் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791404

****


(Release ID: 1791597) Visitor Counter : 240