சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
19 JAN 2022 3:39PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை 31.03.2022-க்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு நீடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
3 ஆண்டு கால நீடிப்புக்கான மொத்த செலவு சுமார் ரூ.43.68 கோடியாக இருக்கும்.
இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதால் நாட்டில் உள்ள துப்புரவு தொழிலாளர்களும் மனிதக் கழிவுகளை அகற்றுவோரும் பயன்பெறுவார்கள். 31.12.2021 கணக்கெடுப்பின்படி மனிதக் கழிவுகளை அகற்றுவோர் எண்ணிக்கை 88,098-ஆக இருந்தது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790939
***************
(Release ID: 1790953)
Visitor Counter : 151