நிதி அமைச்சகம்
2022 ஆம் ஆண்டு அரசுப் பங்குகளின் 8.20% நிலுவைத் தொகை திருப்பிச் செலுத்துதல்
Posted On:
17 JAN 2022 6:21PM by PIB Chennai
2022 ஆம் ஆண்டு அரசுப் பங்குகளின் 8.20% நிலுவைத் தொகை பிப்ரவரி 15 ஆம் தேதி திருப்பிச் செலுத்தப்படவுள்ளது. அதன் பின் எந்த வட்டியும் தரப்படாது. நிலுவைத் தொகை திருப்பி செலுத்தப்படும் தேதி விடுமுறையாக இருந்தால், அதற்கு முந்தைய தேதியில் நிலுவைத் தொகை செலுத்தப்படும்.
அரசுப் பங்குகள் ஒழுங்குமுறை விதிகள் 2007-ன் துணை விதிமுறைகள் 24(2) மற்றும் 24(3) விதிமுறைகள்படி, முதிர்வுத் தொகை அரசுப் பங்குகள் வைத்திருப்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்கு பங்குகளை வைத்திருப்பவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அரசு பங்குகளை பொதுக்கடன் அலுவலகங்கள், கருவூலங்கள் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்ட வங்கிக் கிளைகளில் நிலுவைத் தொகை செலுத்தப்பட வேண்டியதன் தேதிக்கு 20 நாட்களுக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறைகளின் முழு விவரங்களை நிலுவைத் தொகை செலுத்தும் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************
(Release ID: 1790551)
Visitor Counter : 197