அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நட்சத்திரங்களின் இயக்கத்தை கொண்டு விண்மீன் மண்டலங்களின் இருண்ட பொருள் குறித்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

Posted On: 17 JAN 2022 3:29PM by PIB Chennai

இந்திய வானியற்பியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழு ஒன்று, அங்குள்ள அதிநவீன எண் உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தி விண்மீன்களின் மாறும் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்தது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் முனைவர் பட்ட மாணவர் அங்கித் குமார் தலைமையிலான இந்த ஆய்வில்அந்நிறுவனத்தின் பேராசிரியர் மௌசுமி தாசும், ஷாங்காய் ஜியாவ் பல்கலைக்கழகத்தின் டாக்டர். சந்தீப் குமார் கட்டாரியாவும் ஈடுபட்டுள்ளனர் .

நட்சத்திரங்களின் இயக்கத்தை கொண்டு விண்மீன் மண்டலங்களின் இருண்ட பொருள் குறித்து அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இது குறித்து “மன்த்லி நோட்டீசஸ் ஆஃப் தி ராயல் ஆஸ்ட்ரானோமிக்கல் சொசைட்டி” எனும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

பெங்களூரு ஐஐஏவில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டிங் வசதியைப் பயன்படுத்தி, உண்மை போன்றே இருக்கும் விண்மீன் திரள்களை உருவாக்கி, கோளமற்ற இருண்ட பொருளின் ஒளிவட்டத்தின் விளைவை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம்," என்று அங்கித் குமார் கூறினார்.

அவர்களின் ஆராய்ச்சி குறித்த விவரங்களை https://academic.oup.com/mnras/articleabstract/509/1/1262/6406514?redirectedFrom=fulltext எனும் இணைய முகவரியில் காணலாம்.

 

மேலதிக தகவல்களுக்கு அங்கித் குமாரை ankit.kumar@iiap.res.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக்

காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790497

*******



(Release ID: 1790515) Visitor Counter : 241


Read this release in: English , Urdu , Hindi , Bengali