அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அனந்த்நாகை சேர்ந்த தொடர் கண்டுபிடிப்பாளரின் சாதனங்கள் சாதாரண மக்களுக்கு வால்நட் பதப்படுத்தலை எளிதாக்குகின்றன.
प्रविष्टि तिथि:
14 JAN 2022 3:22PM by PIB Chennai
ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான முஷ்டாக் அகமது தார், அக்ரூட் பருப்புகளை பதப்படுத்தலை எளிதாகவும் செயல்தின் மிக்கதாகவும் மாற்றுவதற்கான தொடர் கண்டுபிடிப்புகளை செய்துள்ளதோடு, கம்பங்கள் ஏறுவதற்கான சாதனத்தையும் உருவாக்கியுள்ளார்.
வால்நட் பதப்படுத்துதலுக்கான கண்டுபிடிப்புகளான வால்நட் அரைக்கும் இயந்திரம், வால்நட் பீலர் மற்றும் வாஷர் ஆகியவை வால்நட் பதப்படுத்துதலில் ஈடுபடும் மக்களின் சிரமத்தைக் குறைக்க உதவுகின்றன. ஜம்மு காஷ்மீர், லடாக், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இவர்கள் வாழ்கின்றனர்.
ஓடுகளை அகற்றுவதில் அம்மக்களுக்கு இவரது கருவிகள் உதவுவதோடு, துகள்கள் பறப்பதால் கண்களுக்கு ஏற்படும் சிரமத்தையும் குறைக்கிறது. 2017-ம் ஆண்டில் இந்தியா - ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கண்காட்சியின் போது, சர்வதேச சந்தைகளில், குறிப்பாக ஆப்கானிஸ்தானில், இந்த தொழில்நுட்பம் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
அவரது போல்-புரோ எனும் கண்டுபிடிப்பு, எடை மிகுந்த ஏணிகளை எடுத்து செல்லும் சுமையை குறைக்கிறது. அன்வெண்டா காட்ஜெடிக்ஸ் மூலம் அவரது தொழில்நுட்பம் சந்தையில் கிடைக்கிறது.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் ஆதரவு பேற்ற என் ஐ எஃப் வழிகாட்டுதல் மற்றும் தொழில்முனைதல் குழுவின் வழிகாட்டுதலை பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789911
*********************
(रिलीज़ आईडी: 1790022)
आगंतुक पटल : 206