உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரன் அகாடமி, 2021ம் ஆண்டில் 19000 மணி நேரம் விமான பயிற்சி சாதனை.

Posted On: 05 JAN 2022 5:25PM by PIB Chennai

உத்தரப் பிரதேசம் அமேதி மாவட்டத்தில் உள்ள இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரன் அகாடமி கடந்த ஆண்டில் 19,000 மணி நேரம் விமான பயிற்சி அளித்து சாதனை படைத்துள்ளது.

இந்த விமான பயிற்சி அகாடமி ஃபர்சத்கன்ச் விமானப்படை தளத்தில் கடந்த 1986ம் ஆண்டு அமைக்கப்பட்டது.  இது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பு. இங்கு பயிற்சி விமானிகள் அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த 2021ம் ஆண்டில் இந்திரா காந்தி தேசிய  உரன் அகாடமி, 18 பயிற்சி விமானங்கள் மூலம்  19,000 மணி நேரம் விமான பயிற்சி அளித்துள்ளது. 66 பேர் பயிற்சியை முடித்து பட்டம் பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டில் பயிற்சி விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து 121 பேருக்கு 25,000 மணி நேரம் பயிற்சி அளிக்க இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்திரா காந்தி தேசிய  உரன் அகாடமியில் 6080 அடி ஓடுதளம் உட்பட நல்ல கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இங்கு விமானிகளுக்கான பிஎஸ்சி ஏவியேஷன் 3 ஆண்டு பட்டப்படிப்பு, விமான பராமரிப்புக்கான  இன்ஜினியரிங் டிப்ளமோ ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு 300 மாணவர்கள் தங்கி படிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இங்கு தரமான பயிற்சிகள் அளிக்கப்படுவதால், இங்கு படித்து பட்டம் பெறுபவர்கள் இந்தியா மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787718

********


(Release ID: 1787796) Visitor Counter : 275


Read this release in: English , Urdu , Hindi