எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரேநாடு-ஒரே மின் தொகுப்பு - ஒரே அதிர்வெண் ஆண்டு விழாவை இன்று கொண்டாடியது "பவர்கிரிட்" நிறுவனம்

प्रविष्टि तिथि: 31 DEC 2021 4:29PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, ‘ஒரே நாடு - ஒரே மின்தொகுப்பு - ஒரே அதிர்வெண்’ என்ற திட்டத்தின்  ஆண்டு விழாவை பவர்கிரிட் நிறுவனம் இன்று கொண்டாடியது.

 

இதை முன்னிட்டு, பல நிகழ்ச்சிகளை பவர்கிரிட் நிறுவனம் இன்று நடத்தியது. விழாவின் ஒரு அங்கமாக  நாடு முழுவதும் 70 துணை மின் நிலையங்களில், மூவர்ண விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டன. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரே நாடு- ஒரு மின்தொகுப்பு- ஒரே அதிர்வெண் திட்டத்தின் பயன்கள் குறித்த வீடியோ மக்களுக்கு கட்டப்பட்டன.  இதில் இந்தச்  சாதனை குறித்து பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.

 

மேலும் நாடு முழுவதும் 70 துணை மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொது மக்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. இது தவிர பல இடங்களில் இரத்ததான முகாம்களும் நடத்தப்பட்டன.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786582

                                                                                ********************

 


(रिलीज़ आईडी: 1786689) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी